10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீட்டு வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் - பள்ளிக் கல்வித் துறை 

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் எந்த தேர்வும் நடத்தப்படாது, என பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால், பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக, அரசு அறிவித்தது. இந்நிலையில், மாணவர்களின் மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ளும் வகையில், மாநில அளவில் தேர்வுகள் நடத்தப்பட இருப்பதாகவும், வரும் ஜூன் மாதத்தில் தேர்வுகளை நடத்த வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியானது.


இது தொடர்பாக நியூஸ் 7 தமிழிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், 10-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக, தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில், எந்த மாற்றமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ள பொதுத்தேர்வு நடத்தப்படும், என்பது தவறான தகவல் என விளக்கமளித்த அவர், மாணவர்கள் மற்றும் பெற்றோரை குழப்பமடையச் செய்யும் தகவல்களை பரப்ப வேண்டாம், என கேட்டுக் கொண்டார். மேலும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீட்டு வழிமுறைகள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீட்டு வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் - பள்ளிக் கல்வித் துறை