வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு:
 
 

 
 மத்திய அரசு பரிசீலனை!வங்கி கணக்கு, பான் கார்டு, ரேஷன் கார்டு உள்பட அனைத்திலும் ஆதார் அட்டை இணைக்கப்பட்டு உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் ஆதார் அட்டை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்

இந்த நிலையில் தற்போது வாக்காளர் பட்டியலில் ஆதார் அட்டையை இணைக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒரு நபரின் பெயர் வாக்காளர் பட்டியலில் பல்வேறு இடங்களில் இருப்பதை இதன் மூலம் தடுக்கலாம் என்றும் மக்களவை உறுப்பினர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்தார்

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்க தேர்தல் கமிஷன் விரும்புகிறது என்றும் ஆதார இணைத்தால் வாக்காளர் பட்டியலில் டேட்டாக்கள் பாதுகாப்பாக இருக்கும் என்றும் அதை உறுதி செய்ய தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். எனவே விரைவில் ஆதார் அட்டை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்படும் என்றும் அடுத்த தேர்தலுக்குள் இது நடக்கும் என்றும் கூறப்படுகிறது