தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம் எவ்வளவு தெரியுமா? 

இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 168 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 34 ஆயிரத்து 64 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று கிராமுக்கு 21 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 258 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.