ஏப்ரல் 3ம் தேதி முதல் பைக் பேரணிக்கு தடை - தேர்தல் ஆணையம் உத்தரவு

*ஏப்ரல் 3 முதல் தேர்தல் நடக்கும் ஏப்ரல் 6 வரை பைக் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

*பைக் பேரணி என்ற பெயரில் வாக்காளர்களை அச்சுறுத்துவதாக புகார் எழுந்த நிலையில், ஏப்ரல் 3ம் தேதி முதல் பைக் பேரணிக்கு தடை விதிக்கப்படுகிறது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

*அதன்படி, ஏப்ரல் 3 முதல் தேர்தல் நடக்கும் ஏப்ரல் 6 வரை பைக் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நாள் மற்றும் தேர்தலுக்கு முந்தைய 3 நாளில் தமிழகத்தில் எங்கும் பைக் பேரணி நடத்தக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.