#Budget2021: மத்திய நிதியமைச்சரின் 10 முக்கிய அம்சங்கள்.!

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்களில் 10 முக்கிய அம்சங்கள் அறிவிப்பு.

2021-22ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 29ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மக்களவையில் தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து இன்று 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தது. அதில் முக்கிய 10 அம்சங்கள் பின்வருமாறு. நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்பட்ட 10 முக்கிய அம்சங்கள் இதோ:

    சுகாதாரத்துறைக்கு ரூ.2.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    கொரோனா தடுப்பூசிக்கு ரூ.35,000 கோடி நிதி ஒதுக்கீடு.
    பிரதமரின் சுயசார்பு ஆரோக்கிய திட்டம் ரூ.64,180 கோடி மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படும்.
    நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டம் ரூ.1.41 லட்சம் கோடியில் அறிமுகப்படுத்தப்படும்.
    சுற்றுசூழல் பாதுகாப்பை உறுதி செய்ய பழைய வாகனங்களை திரும்பபெறும் கொள்கை அறிமுகம்.
    அடுத்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் 7 ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும்.
    நகர்ப்புறங்களில் அனைத்து வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்படும்.
    மக்கள் தாங்கள் விரும்பும் நிறுவனத்திடம் இருந்து மின் விநியோகம் பெறும் வசதி அறிமுகம் செய்யப்படும்.
    மேலும் ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயம்.
    காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீடு 49%ல் லிருந்து 74% ஆக உயர்த்தப்படுகிறது.