#BREAKING || மாணவர் சேர்க்கை நிறுத்தம்., சற்றுமுன் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.!

நடப்பாண்டிற்கான எம்.டெக்., தொழில்நுட்பவியல் மற்றும் எம்.டெக்., பயோடெக்னாலஜி பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நிறுத்தப் படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்த நிலையில், இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசு நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வந்த இரண்டு முதுகலைப் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. மத்திய அரசுக்கு 50% வழங்க முடியாது என தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டு, 69 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம், மத்திய அரசு நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வந்த இரண்டு முதுகலைப் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.

இந்நிலையில், எம்-டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ரத்து விவகாரம் தொடர்பாக மத்திய மாநில அரசுகள், விளக்கம் அளிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடப்பாண்டிற்கான எம்.டெக்., தொழில்நுட்பவியல் மற்றும் எம்.டெக்., பயோடெக்னாலஜி பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நிறுத்தப் படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பை எதிர்த்து, இந்த இந்தப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு எழுதி கல்லூரியில் சேருவதற்காக காத்திருந்த 2 மாணவிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, எம்-டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ரத்து விவகாரம் தொடர்பாக மத்திய மாநில அரசுகள், விளக்கம் அளிக்க கோரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.