குதிகால் வலியால் அவதிப்படுகிறீர்களா.? கவலையை விடுங்க.. "வீட்டிலுள்ள இந்த பொருள் போதும்" சரி செய்ய!.
காலை அடி எடுத்து வைக்க முடியாத அளவிற்கு குதிங்கால் வலிக்கும் என்று சிலர் கூறுவார்கள். அந்த வழி கணுக்காலில் படர ஆரம்பித்து மூட்டுவலி வரை பரவி தீராத நோயை உருவாக்கும். உடல் எடை அதிகமாக இருந்தால் கணுக்கால் வலி கண்டிப்பாக இருக்கும். சித்த மருத்துவத்தில் கணுக்கால் வீக்கம் தலையில் நீர்கோர்வை உடன் தொடர்பு கொண்டது என்கின்றனர். உடலில் சமநிலையில் இருக்க வேண்டிய வாதம், பித்தம், கபம் ஆகியவற்றில் ஒன்று அதிகமானாலும் இந்த பிரச்சினை உண்டாகின்றது என்று கூறுகின்றனர்.
பிறகு தலையிலிருந்து கழுத்துப் பகுதி வழியாக வெளியேறி கணுக்காலை அடைந்து அங்கு தேங்கி வலியை உண்டாக்குகிறது. ஆரம்பகாலத்தில் தூங்கி எழுந்ததும் இந்த வலியை உணர்வார்கள்.பிறகு நடக்கும் போது லேசாக வலிக்க தொடங்கி, படிப்படியாக காலை எடுத்து வைக்க முடியாத அளவிற்கு வலி ஏற்படும். எளிய முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இதனை சரிசெய்ய முடியும்.
சாதம் வடித்த கஞ்சியை சூடு பொறுக்கும் இருக்கும்போது அகலமான பாத்திரத்தில் ஊற்றி காலை ஊன்றி வைக்க வேண்டும். சூடு பொறுக்க தாங்கும் சூட்டில் இருந்தால் வலிக்கு இதமாக இருக்கும். சூடு ஆறிய பிறகு மீண்டும் சூடுபடுத்தி வைக்கலாம். தினமும் 15 நிமிடம் வரை செய்தால் கணுக்கால் வலி தீரும். இரவு நேரத்தில் படுப்பதற்கு முன்பு வெந்நீரை சூடு பொறுக்க வைத்து அதில் காலை ஊன்றி காலை, மாலை இரண்டு வேளையும் செய்து வந்தால் கணுக்கால் வலி குறையும். இதமான சூட்டில் இருக்கும் வெந்நீரை கால்களில் ஊற்றி வந்தாலும் வலி தீரும்.
0 Comments
Post a Comment