மாணவர்களுக்கு இன்று முதல் இலவச 2ஜிபி டேட்டா!
மாணவர்களுக்கு இன்று முதல் இலவச 2ஜிபி டேட்டா! தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
ஆன்லைன் வகுப்புகளில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ள உதவிடும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் வரை தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
9,69,047 மாணவர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா டேட்டா கார்டு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்குவதற்கான சிம்கார்டுகள் எல்காட் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
0 Comments
Post a Comment