10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பெயர்ப் பட்டியல் தயாரித்தல் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துதல் - 25.02.2021 வரை நீட்டித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு! 


 

 

 
 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பெயர்ப் பட்டியல் தயாரித்தல் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துதல் - 25.02.2021 வரை நீட்டித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு! 2020-2021 - ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பொருட்டு , அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு | மேல்நிலை முதலாமாண்டு பயிலும் மாணவர்களது விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்து , தேர்வுக் கட்டணத்தினை செலுத்துவதற்கு 01.022021 முதல் 22.02.2021 வரையிலான நாட்கள் வரை பள்ளிகளுக்கு ஏற்கனவே கால அவகாசம் வழங்கப்பட்டது .

இந்நிலையில் , புதிதாக தரம் உயர்த்தப்பட்ட / புதிதாக அங்கீகாரம் வழங்கப்பட்ட பள்ளிகளில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் , பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு பயிலும் பள்ளி மாணவர்கள் பெயர்பட்டியல் தயாரிக்கும் பணியினை மேற்கொள்ள வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி சில முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் இருந்து கோரிக்கை பெறப்பட்டுள்ளது.

எனவே , பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு மாணாக்கரின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதற்கும் , இணையதளம் மூலம் தேர்வுக்கட்டணத்தினை செலுத்துவதற்கும் 24.02.2021 முதல் 25.02.2021 வரையிலான நாட்கள் வரை கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படுகிறது.

இதுவே , பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பணிக்காக வழங்கப்படும் கடைசி வாய்ப்பாகும் . இதன்பின்னர் , இப்பணிக்காக எக்காரணம் கொண்டும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படமாட்டாது .