TITAN COMPANY டைட்டன் கல்வி உதவித் தொகை திட்டம் 2020 - 21 | இந்த கல்வி வருடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

 

டைட்டன் கம்பெனி லிட் 3.
சிப்காட் இண்டஸ்ரியல் காம்ப்ளக்ஸ்,
ஓசூர் - 635 126.

டைட்டன் கல்வி உதவித்தொகை திட்டமானது 1988-ல் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 2421 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். இந்த கல்வி வருடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் :

1. கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டதில் நிரந்தரமாக குடியிருப்பவர்களாக இருத்தல் வேண்டும்,

2. கல்லூரியில் முழுநேரக்கல்வி பயிலுபவர்களாக இருத்தல் வேண்டும்.

 3.கல்வி உதவித்தொகையானது மாணவர்களின் தகுதி மற்றும் தேவையின் அடிப்படையிலேயே வழங்கப்படும்.

 4. பின்வரும் பிரிவுகளில் பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ITI, Diploma, UG, PG, Medical, Eng, Agiri.

5. பின்வரும் வகுப்பினருக்கு குறிப்பிட்ட சதவீதம் முன்னுரிமை வழங்கப்படும். SC/ST. பெண் குழந்தைகள் , மாற்றுத்திறனாளிகள், ஒற்றைப் பெற்றோர் மற்றும் ஆதரவற்றோர்.

6. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் உள்ளவர்கள் மட்டும் விண்ணபிக்க தகுதியானவர்கள்.

7. ஏற்கனவே ஏதாவது ஒரு கல்வி உதவித்தொகை பெற்றிருப்பின் இந்த உதவித்தொகைபெற விண்ணபிக்க இயலாது. தவறான தகவல் அளித்து உதவிதொகை பெறுவது கண்டறியப்பட்டால் பெற்றதொகை முழுவதும் திருப்பிசெலுத்த நேரிடும்.

குறிப்பு:

கீழே குறிப்பிட்டுள்ள இணையதள இணைப்பிற்கு சென்று மாணவர்களின் விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டுகிறோம். தபால் மூலம் விண்ணப்பங்கள் அனுப்புவதை தவிர்க்கவும். https://scholarship.titan.in/newstudent/newaddbasicsregistration

விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.01.2021

DOWNLOAD NOTICE