BREAKING NEWS :தமிழகத்தில்  வரும் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு களுக்கு பள்ளிகள் திறப்பு. தமிழக அரசு அறிவிப்பு! 

 தமிழகத்தில் வரும் ஜனவரி 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாஅச்சம் காரணமாக கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளதால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவும்  வீட்டிலிருந்து தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. பின்னர் கொரோனா  குறைந்துள்ளதால் படிப்படையாக  தளர்வுகள்அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளி திறப்பு குறித்து அரசு அறிவித்திருந்தது.

 இதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் .இதனால் பள்ளி திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர் மத்தியில்  அரசு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளி திறக்க கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொங்கல் முடிந்து 10 மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது .

மேலும் அரசு வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்க மாத்திரைகள் வழங்கவும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஒருவகுப்பில் 25 மாணவர்களுக்கு மிகாமல் செய்யப்பட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும் இது போன்ற பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நமது தமிழ் செய்தி வளைதளத்துடன் இணைந்திருந்தால் நன்றி.