பள்ளிகள் திறப்பு - கருத்து கேட்பு கூட்டத்தை இன்றுடன் முடிக்க உத்தரவு!


பொங்கல் விடுமுறைக்கு பின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், நேரடி வகுப்புகளை நடத்துவது குறித்து, கருத்துக்கள் பெறப்படுகின்றன.பெற்றோர் - ஆசிரியர் கழக உறுப்பினர்கள், மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு வந்து, ஆர்வத்துடன் கருத்துக்களை பதிவு செய்தனர்.

  பெரும்பாலான பெற்றோர், பள்ளிகளை திறக்க வலியுறுத்தினர்.தமிழகத்தில், மார்ச் முதல், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா தாக்கத்தால், பள்ளிகளை திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு மட்டும், முதற் கட்டமாக பள்ளிகளை திறந்து, நேரடி வகுப்புகளை நடத்த, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்து உள்ளது.


பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவுரைப்படி, நாளை வரை, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்தார்.அரசின் உத்தரவுப்படி, நேற்று முதல் அனைத்து பள்ளிகளிலும், கருத்து கேட்பு கூட்டம் துவங்கியது.


பொங்கல் விடுமுறைக்கு பின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், நேரடி வகுப்புகளை நடத்துவது குறித்து, கருத்துக்கள் பெறப்படுகின்றன.பெற்றோர் - ஆசிரியர் கழக உறுப்பினர்கள், மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு வந்து, ஆர்வத்துடன் கருத்துக்களை பதிவு செய்தனர்.பெரும்பாலான பெற்றோர், 'பள்ளிகளை தாமதமின்றி திறக்க வேண்டும். மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.'இதேநிலை நீடித்தால், அவர்களை மீண்டும் கல்வி கற்க துாண்டுவது சவாலானதாக இருக்கும்' என, தெரிவித்துள்ளனர்.


கருத்து கேட்பு பணிகளை, இன்றைக்குள் முடித்து விட்டு, நாளைக்குள் பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இதைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முதல்வர் இ.பி.எஸ்., ஆகியோர் உரிய முடிவுகளை அறிவிப்பர் என, பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.