தமிழகத்தில் பள்ளி திறப்பு குறித்து இன்று முதல் கருத்து கேட்பு! 

 அமைச்சர் செங்கோட்டையன்! நமதுதமிழ் செய்தி வளை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் இதோ உங்களுக்காக: தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என இன்று முதல் கருத்து கேட்கப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 10 மாதங்களாக அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் வீட்டில் இருந்தபடி ஆன்-லைன் வழி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

 இந்த சூழலில் தமிழகத்தில் தற்போது  கொரோனா குறைந்து உள்ளதால் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதையடுத்து பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் கடந்த நவம்பர் 9ஆம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெற்றோர்கள் கலந்து கொண்டு  பள்ளிகளை திறக்க கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்த சூழ்நிலையில் பள்ளி திறக்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 இதனால் தமிழகத்தில் பள்ளி திறப்பு குறித்து இன்று முதல் கருத்து கேட்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் இந்த  கருத்துக்கேட்பு இந்த வாரம் இறுதி வரை இருக்கும் எனவும் பள்ளிகள் திறந்தவுடன் அரசு பள்ளி மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் எனவும் நமது பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 பள்ளி திறப்பு குறித்து பெற்றோர்கள் உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யலாம் அதற்கு ஏற்றவாறு தமிழகத்தில் பள்ளி திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.