கண்ணின் கருவளையத்தை போக்கும்... சரும அழகை பராமரிக்கும்  கற்றாழை ஜெல்.

  கருவளையம்

 
கண்ணின் கீழ் இமைக்கும் கீழுள்ள பகுதியில் கருவளையங்கள் இருப்போர் கற்றாழை ஜெல்லை இரவில் தடவலாம். பகல் முழுவதும் கம்ப்யூட்டரை பார்த்துக் களைத்து நாளடைவில் கண்களின் கீழே கருவளையங்கள் தோன்றும். இந்தக் கருவளையங்களில் கற்றாழை ஜெல்லை பூசும்போது, அவற்றிலுள்ள ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் இயற்கையானவிதத்தில் கருமையை மாற்றி இயல்பான நிறத்தை மீட்டளிக்கின்றன. கண் பக்கத்திலுள்ள மிருதுவான சருமத்திற்கு கற்றாழை ஜெல்லிலுள்ள ஈரப்பதம் இதத்தை அளிக்கிறது.

சரும பாதுகாப்பு

 
கற்றாழை ஜெல் பசைபோன்ற தன்மை கொண்டது. சருமத்தை ஈரப்பதத்துடன் காத்துக்கொள்ள இது உதவுகிறது. கற்றாழை ஜெல்லை உடலின்மீது பூசினால், இது சருமத்திற்கு மேல் பாதுகாப்பான ஓர் அடுக்கினை உருவாக்குகிறது. சருமத்திலுள்ள துளைகள் பார்வைக்குத் தட்டுப்பட்டு அழகை குறைப்பதை அலோவேரா ஜெல் தவிர்க்கிறது. சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. மேலும் சருமத்தின் ஈரத்தன்மையை காத்து சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது. கற்றாழை ஜெல்லில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் இ ஆகியவை உள்ளன. இவை அனைத்துமே ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களாகும் (ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்). சூரிய ஒளியில் அதிக நேரம் இருந்தால் நிலையற்ற அணுக்களால் (ஃப்ரீ ராடிகல்ஸ்) சருமத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும். கற்றாழை ஜெல் அதை தடுக்கிறது. இதை முகத்திலும் பயன்படுத்தலாம்.

சவர காயங்கள்

 
முக சவரம் செய்யும்போது பிளேடினால் காயம் ஏற்படும். சருமம் பாதிக்கப்படலாம். அதேபோன்று வேக்ஸிங் செய்வோருக்கும் சரும பாதிப்பு உண்டாகும். கற்றாழை ஜெல் பாக்டீரியாவுக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது. இதுபோன்ற சின்னஞ்சிறு காயங்களை ஆற்றுவதில் இந்த ஜெல் சிறந்தது. இந்த ஜெல்லிலுள்ள அதிகப்படியான நீர் இந்தக் காயங்களால் ஏற்படும் எரிச்சலை தணிக்கிறது.

கூந்தல் பராமரிப்பு

 
கற்றாழை ஜெல்லின் பிஎச் மதிப்பு 4.5 ஆகும். இதை தலையில் தடவினால் முடி வறண்டு போவதை தடுக்கும். கூந்தலை நனைத்து அலோவேரா ஜெல்லை தடவி பத்து நிமிடம் கழித்து குளித்தால் சருமம் மிளிரும். தேங்காயெண்ணெய் அல்லது அல்மாண்ட் ஆயிலுடன் கற்றாழை ஜெல்லை கலந்தும் பயன்படுத்தலாம்.