கருணை அடிப்படையில் வேலை! தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டது!

 தமிழகத்தில் மருத்துவ காரணங்களுக்காக 53 வயதில் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் பணியின் போது இறக்கும் அரசு ஊழியரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குவதற்கு புதிய நடைமுறையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

 அதன்படி அரசு பணியில் உள்ள ஒருவர் இறந்தால் அது தொடர்பாக மூன்று ஆண்டுகளுக்குள் அரசுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்

  ,கருணை அடிப்படையிலான பணி சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு அளிக்கப்படும். அரசு ஊழியர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு கீழ் இருக்க வேண்டும் என்று புதிய அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 மேலும் கருணை அடிப்படையிலான பணி நியமன வயது 35 என்பதை மாற்றி அதிகபட்ச வயது வரம்பு 40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நமது தமிழ்ச் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.