தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிப்பு .


வரும் பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி அன்று தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சுமார் 10 மாதங்களுக்கும் மேலாம் கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்ப்ட்டுளன.

அதன் பிறகு சிறிது சிறிதாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த வாரம் முதல் 10 மற்றும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத் தேர்வை முன்னிட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கல்லூரிகளில் 3 ஆம் ஆண்டு மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் நடந்து வருகின்றன. அண்ணா பல்கலைக்க்ழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி அன்று தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படும் என தெரிய வந்துள்ளது.

 பொறியியல் கல்லூரி 2 ஆம் ஆண்டு மற்றும் 3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புக்கள் பிப்ரவரி 18 முதல் மே 21 வரை வகுப்புக்கள்: நடைபெற உள்ளன. வரும் மே 24 ஆம் தேதி செய்முறைத் தேர்வுகளும் ஜூன் 2 ஆம் தேதி எழுத்துத் தேர்வும் நடைபெற உள்ளன. அதைப் போல் இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை வகுப்பு நடைபெற உள்ளன. இவர்களுக்கு ஏப்ரல் 15 முதல் செய்முறைத் தேர்வும் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் எழுத்துத் தேர்வும் நடைபெற உள்ளத