அடுத்த சவால்களுக்கு தயார். தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் கிங்  நடராஜன் ட்விட்! 

 தமிழகத்தைச் சார்ந்த யார்க்கர் கிங் என்ற பெருமைக்குரிய நடராஜன் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அசத்தலாக விளையாடினார். என்பது அனைவரும் அறிந்ததே இதனை அடுத்து நெட் பயிற்சிக்காக ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணியின் சார்பாக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த வரும் சக்கரவர்த்தி திடீரென காயம் அடைந்ததால் ஒருநாள் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 

 டி20 போட்டியிலும் கலந்து கொண்ட நடராஜன் அசத்தலாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார். என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சமீபத்தில் அவர் டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இருப்பினும் அவர் ஆடும் 11பேர் அணி  இருப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

. இந்நிலையில் சற்றுமுன் நடராஜன் தனது சமூக வலைத்தளத்தில் வெள்ளை ஜெர்சி அணியும் பெருமையான தருணம் வந்துவிட்டது என்றும் அடுத்த சவால்களை சந்திக்க தயாராக உள்ளதாகவும் நடராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எனவே பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளார்கள்.