தலைமுடி உதிர்வை தடுக்கும் இயற்கை வைத்தியம் .சில குறிப்புகள்! 

 முடி உதிர்வு என்பது குறிப்பிட்ட வயதுக்கு பிறகு அனைவருக்கும் வரக்கூடிய ஒரு தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது .இதற்கு காரணம் ஊட்டச்சத்து குறைபாடு ஆகும். 

 *புரோட்டீன் சத்து குறைபாட்டினால் தலைமுடி உதிர்வு ஏற்படுகிறது .
*அடிக்கடி தண்ணீர் மாற்றி குளிப்பதாலும் தலைமுடி உதிரலாம் .
*தலை முடியை சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம் முடி உதிர்வை பெரிதளவில் தடுக்கலாம்.
*வாரம் இரண்டு முறையாவது தலைக்கு குளித்து தலையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
*வாரத்திற்கு ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்துவர முடி உதிர்வு நின்றுவிடும்.
* இதேபோன்று 3 மாதம் செய்து வந்தால் நல்ல பலன்கிடைக்கும். அத்துடன் இளநரை வருவதையும் தடுக்கலாம்.
* வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலைக்கு குளிக்கும்போது  பயன்படுத்தினால் முடி உதிர்வை தடுக்கலாம்.
 *வெந்தயம் குளிர்ச்சியை கொடுத்து தலை முடி வளர்ச்சியையும் தூண்டும். மேலும் தலைமுடி கருப்பாக நீளமாக வளரும் உறுதுணையாக இருக்கும்.
 *நாட்டு மருந்து கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும் அதை வாங்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை  முற்றிலும் நின்றுவிடும் .
*கருவேப்பிலை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் தலை முடி உதிர்வதைத் தடுப்பதோடு அடர்த்தியான முடியை பெறலாம் .
*இரும்புச் சத்து புரோட்டீன் நிறைந்த உணவு பொருட்களை அதிக அளவில் எடுத்துக் கொள்வதன் மூலம் முடி உதிர்வை வருவதை தவிர்க்கலாம்.
 *இளஞ்சூடான எண்ணெயை தலையில் தடவி மசாஜ் செய்வதன் மூலம் முடி கொட்டுவதைத் தடுக்கலாம்.
 இதன் மூலம் தலையில் ரத்த ஓட்டம் அதிகமாக முடிக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதையெல்லாம் பயன்படுத்தி பாருங்கள் உங்களுடைய இதை பயன்படுத்தி உங்கள் முடி வளர்ச்சியை அதிகப்படுத்திக் கொள்ளலாம் . தலைமுடி உதிர்வையும் தடுத்துக்கொள்ளலாம் இயற்கையான வழியில் நன்றி.