தமிழகத்தில் கல்வி கடன் ரத்து செய்யப்படுமா? பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

  நமது பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இன்று கோபிசெட்டிபாளையத்தில் பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது

 மாணவர்கள் கல்விக் கடன் ரத்து செய்வது குறித்து தேர்தல் வரும்போதுதான் தெரியவரும் என்றும் தெரிவித்தார். மேலும் 10மற்றும்12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் செய்முறை தேர்வு கட்டாயம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து இன்று முதல் ஒரு வாரத்திற்கு  பெற்றோர் ,மாணவர்கள், கல்வியாளர்கள் இடம் கருத்துகள் கேட்கப்படும் அதை பொருத்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் எனவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.