தேசிய அளவிலான பசு அறிவியல் தேர்வு: உயர்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு!!

 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பசுமாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மத்திய அரசு தேர்வு ஒன்று நடத்தப்பட உள்ளது .இந்த தேர்வானது பிப்ரவரி 25ஆம் தேதி தேசிய அளவிலான அறிவியல் தேர்வு என்ற பெயரில்  நடக்க உள்ளது.

 மத்திய அரசின் பால் மற்றும் கால்நடை துறை அமைச்சகம் சார்பில் (ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்) செயல்படுகிறது. அறிவியல் ரீதியாக பசுக்களை காப்பதற்காக இந்த ஆணையம் கடந்த 2019ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதன் சார்பில் விருப்ப அடிப்படையில் தேர்வு பிப்ரவரி 25ஆம் தேதி தேர்வு  நடைபெற உள்ளது. இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது.

 இணையதளம் மூலம் நடைபெறும் இந்த தேர்தலில் நாடு முழுவதும் உள்ள உயர்நிலைப் பள்ளி முதல் கல்லூரி வரையிலான மாணவர்கள் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
முதன் முறையாக நடைபெறும் இந்தத் உயர்வு இனி ஆண்டுதோறும் நடைபெறும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வில் அனைவரும் கலந்து கொள்வது கட்டாயம் இல்லை விருப்பம் உள்ளவர்கள் மட்டும் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 தேர்வில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் சிறந்த மதிப்பெண் பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் சிறப்பு சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து இந்து தமிழ் நாளேட்டில் ரஷ்யா காமதேனு ஆயோக் தலைவர் கத்தரியா கூறும் கூறும்போது நாட்டு மக்களுக்கு பசுக்களின் மீதான முக்கியத்துவம் குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த தேர்வு தொடங்கப்பட்டுள்ளதாகவும்  தேர்வுக்கான பாடத் திட்டங்களை இணையதளத்தில் வெளியிட உள்ளதாகவும் இதற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 பசுக்கள் மீது ஆர்வம் கொண்ட பொது மக்களும் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நமது தமிழ் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.