இனி ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு!

  நீட் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை ஆன்லைன் மூலம் நடத்தலாமா? என மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு தேசிய தேர்வு முகமை கடிதம் எழுதியுள்ளது.

 அக்கடிதத்தில் ஒரே முறை தேர்வு நடத்துவது அல்லது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது .எனவே மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க நீட் தேர்வு இரண்டு முறை நடத்த தேசிய தேர்வுகள் முகமை திட்டமிட்டுள்ளது என்றும் வழக்கமான முறையில் தேர்வு நடத்துவது சற்று சிரமமான விஷயம் என்பதால் ஆன்லைனில் நடத்த  திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது .எனவே வரும் காலங்களில் நீர் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை ஆன்லைனில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.