ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பிரபல இந்திய வீரர் திடீர் விலகல் !

 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய வீரர் கே.எல். ராகுல் விலகினார் .இந்தியா ஆஸ்திரேலியா இடையே இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் உள்ள நிலையில் ராகுல் விலையுள்ளார். ராகுலுக்கு பயிற்சியின் போது  கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்தியா திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உமேஷ் யாதவ் மற்றும்  ஷமி ஆகியோர் காயம் ஏற்பட்டு அதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் வரும் ஜனவரி 7-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்திய வீரர் ராகுல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து  விலகியுள்ளார்.