கல்லூரி மாணவர்களுக்கு. செமஸ்டர் அட்டவணை வெளியீடு.!


பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

 தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டன. அதன்பிறகு கடந்த ஜனவரி 19ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து பொறியியல் மாணவர்களுக்கான ஏப்ரல்-மே செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. முதலாமாண்டு மாணவர்களுக்கான இரண்டாவது செமஸ்டர் மற்றும் இறுதி செமஸ்டர் தவிர பிற மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் பிப்ரவரி 18ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் தமிழக அரசின் வழிகாட்டுதல் படி, ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.