உலக நகரங்களை பின்னுக்கு தள்ளிய சென்னை!எதனால் தெரியுமா? 

பாதுகாப்பு கருதி வீடு ,அலுவலகம், பேருந்து நிலையம், ரயில் நிலையம், பூங்காக்கள் மற்றும் அனைத்து பொது இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உலகிலேயே அதிகமான சிசிடிவி கேமராக்கள் உள்ள நகரங்களின் பட்டியலில் சென்னை முதல் இடத்தை பிடித்துள்ளது. தற்போது குற்றங்களை தடுக்கவும் குற்றவாளிகளை கண்டறியும் மேலும் பலவற்றிற்கும் இந்த சிசிடிவி கேமராக்கள் உபயோகமான ஒன்றாக உள்ளன .

இந்த நிலையில் "விபிஎன்" என்ற நிறுவனம் உலகில் அதிகமான சிசிடிவி கேமராக்கள் உள்ள நகரங்கள் குறித்த பட்டியலை தயார் செய்துள்ளது .அதாவது ஒரு சதுர கிலோ மீட்டருக்கு எத்தனை கேமரா என்ற கணக்கில் உலகம் முழுவதும் 130 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் சென்னையில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு சராசரியாக 650க்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது .

இதனால் உலகில் அதிகமான சிசிடிவி கேமரா உள்ள நகரம் சென்னை முதலிடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது போன்ற பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நமது தமிழ் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.