ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். 

 நமது தமிழ் செய்தி வளைதளத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த தகவல்கள் பதிவிடப்படுகிறது பார்த்து பயனடையுங்கள். நமது பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் .அப்போது அவர் கூறியதாவது 

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பொதுத்தேர்வு குறித்து அட்டவணை வெளியிடப்படும் என்றும் பள்ளிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்பதால் அதற்கு பின்னரே பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும் பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு பள்ளிதிறப்புக்கு பிறகு  முதல்வர் அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப முதல்வர் ஆணை பிறப்பித்து உள்ளார்.  இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.