பிஹெச்டி மாணவர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு!

  நமது தமிழ் செய்தி வளை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் இதோ உங்களுக்காக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் பிஹெச்டி மாணவர்கள் மாத உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

 தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் முழு நேரமாக பிஹெச்டி படித்து வரும் மாணவர்களுக்கு தமிழக அரசின் ஆராய்ச்சி படிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பம் www.tndce.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . மாணவர்கள் தங்கள் நெறியாளர் மற்றும் கல்லூரி முதல்வர் களை அணுகி பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கையொப்பம் பெற்று

 கல்லூரி கல்வி இயக்குனர் இவெகி சம்பத் மாளிகை கல்லூரி சாலை சென்னை-6

  என்ற முகவரிக்கு வரும் ஜனவரி மாதம் 29-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க என்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பருக்குள் பிஎச்டி படிப்பில் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் எனவும் முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் எழுத்துத் தேர்வில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவராக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

. மேலும் யுஜிசி, ஜேஆர்எஃப் தேர்வை எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் இந்த உதவித்தொகையை பெற தகுதி உடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 120 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் மாதம் ரூபாய் 5000 வீதம் ஆண்டுக்கு ரூபாய் 6000 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் 2019 ஆம் ஆண்டில் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க இயலாது என்றும், பகுதிநேர ஆய்வாளராக இருக்கக்கூடாது என்றும், எந்த ஆராய்ச்சி நிதியையும் பெறுபவராக இருத்தல் கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.