9,11ம் வகுப்புகள் திறப்பது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து முடிவு: அமைச்சர் பேட்டி
ஈரோடு மாவட்டம் கோபியில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: திண்டுக்கல் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்தால்கூட கொரோனா வரும். தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
ஆசிரியர்களுக்கு காய்ச்சல் இருந்தால், அவரும் அவருடன் இருந்தவர்களும் உரிய சிகிச்சை பெற்று கொள்ளலாம். தற்போது உயர் கல்வி வகுப்புகள் மட்டுமே திறக்கப்பட்ட நிலையில் 9 மற்றும் 11ம் வகுப்புகள் திறப்பது குறித்து முதலமைச்சர் உரிய ஆலோசனை செய்து முடிவெடுப்பார். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்
0 Comments
Post a Comment