பிப்.8ம் தேதி அமலாகும் புது விதிக்கு சம்மதிக்காவிட்டால் வாட்ஸ் அப் வேலை செய்யாது!

 நமது தமிழ் செய்தி வளை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் இதோ உங்களுக்காக பதிவிடப்படுகிறது;
வாட்ஸ்அப் செயலியின் புதுப்பிக்கப்பட்ட சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கைகள் வருகிற பிப்ரவரி 8ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றது. வாட்ஸ்ஆப் நிறுவனம் கடந்த 4ம் தேதி தனியுரிமை கொள்கைகளை புதுப்பித்தது. இது குறித்து தனது அறிவிப்பை ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு அனுப்பி உள்ளது.

 இந்த அறிவிப்பில் வாட்ஸ்அப் பயனர்கள் புதிய விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கைக்கு தங்களது ஒப்புதலை வழங்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் கணக்கை நீக்க வேண்டியிருக்கும். அவர்களால் பிப்ரவரி 8ம் தேதிக்கு பின் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது. வாட்ஸ்ஆப் நிறுவன விதிமுறைகள், நிபந்தனைகள் அல்லது அம்சங்களை நீங்கள் மீறினால் அல்லது நிறுவனத்துக்கோ, பயனர்களுக்கோ, மற்றவர்களுக்கோ தீங்கு, ஆபத்து அல்லது சட்டரீதியான வெளிப்பாடுகளை ஏற்படுத்தினால் எங்கள் சேவைகளுக்கான உங்களது அணுகலை நாங்கள் மாற்றவோ தடை செய்யவோ அல்லது நிறுத்தவோ முடியும்.


வாட்ஸ்அப் கணக்கு நீண்ட காலத்திற்கு பயன்படுத்தாத நிலையில் இருந்தால் அந்தகணக்கு முடக்கக்கூடும் அல்லது நீக்கக்கூடும். எங்கள் சேவையில் உங்களது செயல்பாடு குறித்த தகவல்கள் சேரிக்கப்படும். இதில் உங்கள் செயல்பாடுகள், தொடர்புகளின் நேரம், கால அளவு, முறைகள், பதிவுகள் கோப்புகள் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்படும்”என குறிப்பிடப்பட்டுள்ளது