அனைத்து பள்ளிகளிலும் இந்திய திருநாட்டின் 72- வது குடியரசு தினவிழாவினை கொண்டாட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

 
நமது இந்திய திருநாட்டின் 72 - வது குடியரசு தினவிழா 26.01.2021 அன்று ( செவ்வாய் கிழமை ) நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது . இதனைத் தொடர்ந்து , அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர் / மாவட்டக் கல்வி அலுவலர் / வட்டாரக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்துப் பள்ளிகள் | கல்வி அலுவலகங்களில் தேசியக்கொடியினை ஏற்றி , விழாவினை , கோவிட் -19 சார்பான தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி எளிய முறையில் சிறப்பாக கொண்டாடுமாறு தெரிவிக்கப்படுகிறது.