பள்ளிகளில் இரண்டு நாட்களாக நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் 70 சதவீத பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்கலாம் என தெரிவித்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தகவல்! 

 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் 70% பேர் பள்ளிகளை திறக்க வேண்டும் என இரண்டு நாட்களாக நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஜனவரி 18ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்க வாய்ப்பு உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 தமிழகத்தில்  10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்பதால் ஆன்லைன் வகுப்பு மாணவர்களுக்கு முழுமையான பலனை தராது எனவும் ,பெரும்பாலான பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த முறை கேட்கப்பட்ட கருத்து  கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இந்த முறை பெரும்பாலானவர்கள் பள்ளிகளை திறக்க கோரியதாக பள்ளி கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.