தமிழகத்தில் 7 மாவட்டங்களில்  இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு !சென்னை வானிலை ஆய்வு மையம் !

 வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று ஏழு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் கூறுகையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில்

 தஞ்சாவூர்

 திருவாரூர்

 நாகப்பட்டினம்

 மயிலாடுதுறை

 கடலூர்

 கல்லக்குறிச்சி

 அரியலூர்

 ஆகிய ஏழு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.