சிறுநீரக பிரச்சினை உள்ளவர்களுக்காக.. நச்சுன்னு 4 டிப்ஸ்.!!
சிறுநீரக பிரச்சினையால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் உணவு கட்டுபாட்டை மேற்கொள்வது அவசியம். எந்த உணவுகளை சாப்பிடவேண்டும் என்பதை தெரிந்து கொண்டு சாப்பிட்டால் சிறுநீரககல் பிரச்சனையை சரிசெய்து விடலாம். எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.
1.வீடுகளில் மண்பானையில் நீர் ஊற்றி நன்னாரி வேர், வெட்டி வேர், விளாமிச்சை வேர் போன்றவற்றை போட்டு அருந்தினால் குடல், வயிறு, சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் தீரும்.
2.வாழைத்தண்டு, முள்ளங்கி, சுரைக்காய், பூசணிக்காய் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கலாம்.
3.அன்னாசிபழத்தில் சிறுநீரக கற்களின் கருவாக இருக்கும் ஃபைப்ரின் எனப்படும் சத்தை சிதைக்கும் நொதிகள் உள்ளன. இது சிறுநீரக கற்களை கறைக்கும் தன்மை கொண்டுள்ளதால் இதை சாப்பிடலாம்.
4.கொள்ளில் உள்ள சில நீர்ப் பொருட்கள் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கும் திறன் கொண்டவை.
0 Comments
Post a Comment