பள்ளிக்கு சென்ற +2 மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா உறுதி!
பள்ளிக்கு சென்ற 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா உறுதியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கொரோனா பரவல் தற்போது குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு எடுத்தது. இதன்படி பெற்றோரிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்ட நிலையில் , 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க பெற்றோர்கள் பெரும்பாலோனோர் விருப்பம் தெரிவித்தனர். பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மீண்டும் தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு கடந்த 19ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. கொரோனா தடுப்பு நெறிமுறைகளுடன் பாதுகாப்பாக பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும், த சேலத்தில் ஒரு மாணவி, ஒரு ஆசிரியர், சென்னையில் மூன்று ஆசிரியர்கள், பழனியில் ஒரு ஆசிரியர் என ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் முத்தூர் அரசு பள்ளிக்கு சென்ற +2 மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா உறுதியானது. கொரோனா உறுதியான 2 மாணவர்கள், ஒரு மாணவி உள்பட மூவரும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி 22, 23, 24 இல் நடந்த சோதனையில் 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அச்சம் உண்டாகியுள்ளது.
0 Comments
Post a Comment