குட் நியூஸ் ! 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும் இயந்திரவியல் பட்டயப் படிப்பு படிக்கலாம் !
குட் நியூஸ் ! 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும் இயந்திரவியல் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இயந்திரவியல் பட்டயப் படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் தொழில் வணிகத்துறையின்கீழ் சென்னையில் அரசு தொழில்நுட்பப் பயிற்சி நிலையத்தில் இயந்திரவியல் பட்டயப்படிப்புகளாக கருவி மற்றும் அச்சு குளிர்சாதனம் மற்றும் காற்றுப்பதனம் ஆகிய படிப்புகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. அதேபோல, திண்டுக்கல்லில் உள்ள கருவிப் பொறியியல் பயிலகத்தில் கருவி மற்றும் அச்சு தொடர்புடைய இயந்திரவியல் பட்டயப்படிப்பு கற்றுத்தரப்படுகிறது.
இந்தப் பட்டயப்படிப்புகளில் முதலாமாண்டில் சேர்க்கைக்கு 10 -ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்கு +2 கலைப்பிரிவில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் அல்லது தொழிற்பிரிவில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் ஒன்றையும், பொறியியல் பாடப்பிரிவில் கருத்தியல் மற்றும் செய்முறைத் தேர்வுப் பாடங்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
இல்லையெனில், தொழிற்பயிற்சி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சிக்குப் பின்னர் தொழிற்பிரிவில் இரண்டாண்டு பயிற்சி பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த படிப்புக்கு, வயது வரம்பு ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சென்னை, அரசு தொழில்நுட்பப் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயில விரும்புபவர்கள், "கண்காணிப்பாளர், அரசு தொழில்நுட்பப் பயிற்சி நிலையம், கிண்டி, சென்னை-32" எனும் முகவரியில் விண்ணப்பப் படிவத்தை நேரிலோ அல்லது அஞ்சல்வழியிலோ பெற்றுக் கொள்ளலாம்.
அதேபோல, திண்டுக்கல்லில் பயில விரும்புபவர்கள் "முதல்வர், திண்டுக்கல் கருவிப் பொறியியல் பயிலகம், திண்டுக்கல்" என்ற முகவரியிலும் விண்ணப்பப் படிவத்தை நேரிலோ அல்லது அஞ்சல்வழியிலோ பெற்றுக்கொள்ளலாம்.
சேர்க்கை குறித்து மேலும் விவரங்களை அறிய https://www.itedgl.com என்ற இணையதளத்திலோ அல்லது 044 - 22255149 அல்லது 0451 - 2471301 எனும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். பட்டயப் படிப்பு படிக்கலாம் !
0 Comments
Post a Comment