அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் சலுகை
லேண்ட்லைன், பிராட்பேண்ட் மற்றும் பைபர்நெட் சேவையில், அனைத்து அரசு ஊழியர்களுக்கும், 10 சதவீத சலுகை வழங்கப்படும்' என, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அறிவித்துள்ளது. பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களாக உள்ள அரசு ஊழியர்களை தக்க வைப்பதற்காக, அவர்களுக்கு, 10 சதவீதம் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் செலுத்தும் கட்டணத்தில், ஏற்கனவே, 5 சதவீதம் சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இதன்படி, லேண்ட்லைன், பிராட்பேண்ட் மற்றும் பைபர் இன்டர்நெட் கட்டணங்களில், 10 சதவீதம் சலுகை கிடைக்கும். இந்த சலுகை, அனைத்து அரசு துறைகளில் உள்ள ஊழியர்களுக்கு பொருந்தும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
0 Comments
Post a Comment