தமிழகத்தில் இன்று குரூப் 1 தேர்வு நடைபெறுகிறது.

 டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெறுகிறது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் தற்போது காலியாக உள்ள 66 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வில் மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 237 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

 இதில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 825 பெண் தேர்வர்களும் ,ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 406 ஆண் தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.  மேலும் 11 மூன்றாம் பாலினத்தவர்கள் தேர்வு எழுத உள்ளார்கள் . 

சென்னையில் மட்டும் 46 ஆயிரத்து 965 பேர் தேர்வு எழுத உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் 856 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் இன்று காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெறும்என்று டிஎன் பிஎஸ்சி அறிவித்துள்ளது. மேலும் இது போன்ற பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நமது தமிழ் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.