ஆந்திராவில் மர்ம நோய்க்கு காரணம் பால் மற்றும் தண்ணீரில் ஈயம் கலந்திருக்கும் அதிர்ச்சி! 

  ஆந்திராவில் மர்ம நோய் தாக்கத்திற்கு காரணம் என்ன என்பதை ஆய்வு செய்ய டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ குழு ஆய்வு நடத்தி வருகிறது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூரில் கடந்த சனிக்கிழமை அன்று இரவு முதல் தொடர்ந்து நான்கு நாட்களாக மர்ம நோயால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 இந்த மாதிரியான நோய்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன மாதிரியான அறிகுறிகள் வருகிறது  என்றால் வாந்தி, மயக்கம் ,காய்ச்சல், வலிப்பு என சுமார் 530 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தி அம்மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 20 நோயாளிகள் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. டெல்லியிலிருந்து எய்ம்ஸ்  மருத்துவ நிபுணர்கள் வருகை தந்தனர்.

 பாதிக்கப்பட்டவர்களிடம் ஆய்வு நடத்த  அந்த பகுதியில் உள்ள குடி தண்ணீர் மற்றும் பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தப் பரிசோதனையின் முடிவில் பால் மற்றும் தண்ணீர் இரசாயனம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. கலப்படம் எப்படி வந்தது?  இதற்கு காரணம் யார்? என்பதை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும்  மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பால் ஊற்றும் தண்ணீரில் அத்தியாவசியமான ஒரு பொருள் பால் மற்றும் தண்ணீல் ஈயம் போன்ற ரசாயனம் கலந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.