தமிழகத்தில் எந்நேரமும் பள்ளிகளை திறக்க அரசு தயாராக உள்ளது. கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன்.

கொரோனா காரணமாக கடந்த 8 மாதங்களாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.கொரோனா தாக்கம் சற்று குறைந்துள்ளதால்   கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் மட்டும் கடந்த 7ஆம் தேதி கல்லூரிகள் திறக்க அரசு அனுமதி அளித்தது.

 அதே நேரத்தில் பள்ளிகளை திறக்க அரசு எந்நேரமும் தயாராக இருப்பதாக  நமது கல்வித் துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார் .மேலும் பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் இவர்களின் கருத்தை கேட்டு அதற்கேற்றார்போல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார் .

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புரெவி  புயல் பாதித்த பகுதிகளை நேரில் சென்று அவர் ஆய்வு செய்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.