முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு! 

 முனைவர் பட்டம் பயிலும் எஸ்சி ,எஸ்டி மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரங்கள் இதோ :முழுநேரமாக படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அதாவது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மட்டும் ஆண்டுக்கு ரூபாய் 50 ஆயிரம் கல்வி உதவி தொகை அளிக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரத்தில் பகுதிநேரமாக பயிலும் மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாணவ-மாணவிகளின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ 2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முது நிலைப் பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பங்களை அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் எனவும், விண்ணப்ப விவரங்கள் அடங்கிய விளம்பரங்கள் தனியாக வெளியிடப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தகுதி உள்ள மாணவர்கள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.