இந்த மாதம் ஏழாம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கலாம் முதலமைச்சர் அறிவிப்பு. 

 கொரோனா தொற்றின் காரணமாக கடந்த சில மாதங்களாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் வரும் 7ஆம் தேதி முதல் துவங்க அனுமதிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். அந்த மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகள் வரும் 7ஆம் தேதி முதல் துவங்கலாம் எனவும் அவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது எனவும் முதலமைச்சர்  தெரிவித்துள்ளார். நடப்பு கல்வி ஆண்டில் சேரும் புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் பிப்ரவரி மாதம் முதல் தேதியில் இருந்து செயல்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.