தொடர்ந்து உயர்வை சந்திக்கும் தங்கத்தின் விலை !கடந்த ஒரு வாரமாக ஏறுமுகத்துடன் தங்கத்தின் விலையானது விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 37, 952 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு சவரனுக்கு ரூ 200 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 152 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் நேற்று 4 ஆயிரத்து 744 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில்இன்று 4 ஆயிரத்து 769 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 73.70ஆகவும் ஒரு கிலோ வெள்ளியின் விலை 73 ஆயிரத்து 700 ரூபாய் ஆகும் விற்பனையாகியுள்ளது.