பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தல்.

 தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் தங்கராஜ் அவர்கள் தலைமை வகித்தார் .இதில் செயலாளர்,மாநில இணைச் செயலாளர், மாவட்ட துணைத்தலைவர், பொதுச் செயலாளர் அனைவரும் இதில் பங்கேற்றனர்.

 .ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 12 லட்சம் பேரின் நலன் கருதி பழைய ஓய்வூதியத் திட்டத்தை  தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் 2004 முதல் 2006 ஆகிய ஆண்டுகளில் தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக கணக்கில் கொண்டு பதவி உயர்வு மற்றும் தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

 ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் மீதான நடவடிக்கைகளை தமிழக அரசு ரத்து செய்திட வேண்டும். எனவும் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது .

 அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீட்டுக்கான வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும், ஆசிரியர்கள் நேரடி நியமனம் வயது அரசாணையை திரும்பப் பெற வேண்டும், எனவும், தொடக்க கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும், எனவும், கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் உயர்கல்வி பயில முன் அனுமதி பெற்று பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 மாவட்ட கல்வி அலுவலரின் மேலொப்பம்  பெறவில்லை எனக்கூறி நூற்றுக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்மறுக்கப்பட்டுள்ளது.  கடந்தகால அரசு அனுமதியின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு உதவி பெறும் பள்ளி சிறப்பு நிகழ்வாக கருதி உயர்கல்விக்கான பின்னேற்பு வழங்கிட வேண்டும் எனவும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 திண்டுக்கல் மாவட்டத்தில் m.phil அனுமதி வேண்டி விண்ணப்பித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன் அனுமதி வழங்கப்பட்டது போக நிலுவையில் உள்ள அனைவருக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இது போன்ற  பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள தமிழ்ச் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.