தொடர்ந்து கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை!! 

 கடந்த  சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமா தினமும் சரிவையே  கண்டு வந்தது. தற்போது  தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 360 உயர்ந்து ஒரு சவரன் ரூ 37, 248 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு கிராம் இரண்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 4,652க்கு விற்பனை செய்யப்படுகிறது.