திடீரென உயர்ந்த தங்கத்தின் விலை! 

 கடந்த ஒரு வாரமாக இறங்கு முகத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை திடீரென்று நேற்று  உயர தொடங்கியது. இன்று சவரன் ஒன்றிற்கு ரூ 680  உயர்ந்து சென்னையில் விற்பனை செய்யப்பட்டது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 36 , 888க்கும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 85 உயர்ந்து ரூபாய் 4,611க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 அதேபோல் வெள்ளியின் விலையும் இன்று சற்று உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை  1 கிராம் ரூபாய் 2.90 காசுகள் உயர்ந்து ரூ 67.70 விற்பனை செய்யப்பட்டது இதுதான் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரங்கள்.