கொரோனாவுக்கு தடுப்பூசி போடும் பணி ரஷ்யாவில் தொடக்கம் நிம்மதி பெருமூச்சில் மக்கள்!!

 கடந்த சில மாதங்களாக கொரோனா நோய் தொற்று உலகை அச்சுறுத்தி வரும் இந்நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி ரஷ்யாவில் தொடங்கியது, அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 உலகில் ஏதோ ஒரு பகுதியில் கொரோனா தடுப்பு ஊசி வந்துவிட்டது பொதுமக்கள் அனைவருக்கும் இது பயன்பாட்டிற்கு விரைவில் வரும் எனவும் நம்பப்படுகிறது. covid-19 நோய்க்கு தங்கள் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட புதிய தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி அளித்த ரஷ்யா  அதை உறுதி செய்து தற்போது பொதுமக்களுக்கான பயன்பாட்டையும் தொடங்கிவிட்டது.

 ரஷ்யாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பதிவுசெய்யப்பட்டது 95% நோய்த் தொற்றுக்களை தடுக்க கூடியது என்றும் மிகப்பெரிய பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது எனவும் இந்த மருந்தை உருவாக்கியவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இன்னொரு பக்கம் பெரிய அளவிலான பரிசோதனைகளும் போய்க்கொண்டிருக்கின்றன.

 இரண்டு முறை ஊசி போட்டுக்கொள்வது இந்த தடுப்பூசி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது இரண்டு டோஸ்கள் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது முதல் டோஸ்.   போடப்பட்டு வருகிறது எனவும், இந்த முதல் டோசை போட்டுக் கொள்வதற்கு ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் பதிவுகளை செய்து கொண்டு இருக்கிறார்கள் எனவும், ஆனால் ரஷ்யாவில் எவ்வளவு உற்பத்தி செய்ய முடியும் என்று இதுவரை தெரிவிக்கவில்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது.

 இந்த ஆண்டு முடிவில் 20 லட்சம் டோஸ்கள் உற்பத்தியாளர்கள் தயாரித்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் யார் யாருக்கெல்லாம்  தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று பார்த்தால், 

சுகாதாரத் துறையில் வேலை செய்பவர்கள், மற்றும் சமூகப் பணியாளர்களுக்குப் போடப்படுவதாக மாநகர மேயர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி அதிகம் கிடைக்கக் கிடைக்க தடுப்பூசி பெறுபவர்களின் பட்டியல் நீளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மாஸ்கோ நகரில் 70 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது 

.மேலே குறிப்பிட்ட அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகளை சார்ந்த அதாவது 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட நகரவாசிகள் ஆன்லைனில் இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு பதிவு செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .கடந்த 30 நாட்களில் ஊசி போட்டுக் கொண்டவர்கள் கடந்த இரண்டு வாரங்களில் சுவாச நோய் தாக்கியவர்கள், நாள்பட்ட நோய் உள்ளவர்கள் ,கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், தடுப்பூசி போடப்படுவது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஒவ்வொருவரும் இரண்டு முறை ஊசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் முதல் முறை ஊசி போட்ட பிறகு 21 நாட்கள் கழித்து இரண்டாவது ஊசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகில் ஏதோ ஒரு மூலையில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது உலகிலுள்ள மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இது போன்ற பல தகவல்களை  தெரிந்து கொள்ள தமிழ்ச் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.