சிபிஎஸ்இ பொதுத் தேர்வுக்கான தேதி இன்று மாலை வெளியிடப்படும் என அறிவிப்பு. 

 சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதி இன்று மாலை வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா காரணமாக நடப்பு கல்வியாண்டில் பள்ளி மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்கு பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளில் பாடங்களை கற்றுக் கொண்டு வருவதாகவும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வு நடத்தப்படவில்லை எனினும் இறுதி தேர்வு கட்டாயம் நடத்தப்படும் எனவும் கல்வித்துறை தெரிவித்துள்ளது

. இந்த நிலையில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பொதுத் தேர்வுக்கான தேதி இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என மத்திய கல்வி த்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அவர்கள் தெரிவித்துள்ளார்.