புதுச்சேரி அருகே கடலில் மூழ்கிய மாணவரின் உயிரை காப்பாற்றிய இளைஞர் குவியும் பாராட்டுக்கள்! 

 நமது தமிழ் செய்தி வளைதளத்திற்கு கிடைத்த தகவல்கள் இதோ: புதுச்சேரி அருகே கடலில் மூழ்கி சுயநினைவின்றி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவரை நீதி சென்று மீட்டு உயிரை காப்பாற்றிய இளைஞரை காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

 புதுச்சேரி தட்டாஞ்சாவடி சேர்ந்தவர் பாலாஜி வில்லியனூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவருக்கு நேற்று பிறந்தநாளையொட்டி பாலாஜி தன்னுடன் படிக்கும் சக பள்ளி மாணவர்கள் 7 பேருடன்  கடற்கரைக்கு சென்று அங்கு பாலாஜி தனது நண்பர்களுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை மிகவும் உற்சாகமாக கொண்டாடினார்.

 பின்னர் அவர்கள் அனைவரும் ஆறும் கடலும் இணையும் முகத்துவாரம் பகுதியில் இறங்கி குளித்தனர் .அப்போது கடலில் இருந்த ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதில் புவியரசன் என்ற மாணவர் மாயம் ,பாலாஜி என்ற மாணவன் நீரில் மூழ்கி சுயநினைவின்றி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர் 

.பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த ஐயனார் என்பவர் தனது நண்பர்களுடன் கடற்கரைப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மாணவர்களின் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்தார்.துளியும் யோசிக்காமல்  உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த பாலாஜியை மீட்டு கரைக்கு கொண்டு வந்து உடனே அந்த மாணவர் புதுச்சேரி மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

 மாயமான புவியரசன் தேடும் பணியில் தவளகுப்பம் காவல்துறையினர், உள்ளூர் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவர்கள் மீட்டு அவரது நண்பர்கள் முதலுதவி அளிப்பது மான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

 எனவே அய்யனாரின் இந்த செயலை  காவல்துறையினரும் பொதுமக்களும் பெரிதும் பாராட்டி வருகின்றனர். இது போன்ற பல தகவல்களை தெரிந்து கொள்ள தமிழ்ச் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.