திடீரென  இரவு நேர ஊரடங்கு வாபஸ்! 

இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்படும் என கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா அவர்கள் அறிவித்தார் .இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்த இந்த நிலையில் ஊரடங்கு வாபஸ் பெற்றுக் கொள்வதாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அவர்கள் அறிவித்துள்ளார். 

அதாவது இரவு 10 மணிக்கு மேல் எந்த ஒரு நிகழ்ச்சிகள் அல்லது விழாக்களை கொண்டாட கூடாது எனவும் அறிவித்திருந்தார். அதாவது ஜனவரி இரண்டாம் தேதி வரை இந்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அதன் படி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் யாரும் நடமாடக் கூடாது என்றும் கர்நாடக முதல்வர் அறிவித்த இந்த நிலையில் கர்நாடகாவில் இன்று இரவு முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 அதாவது தொழில்நுட்ப ஆலோசனை குழு அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில முதலமைச்சர் அலுவலகம் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.