அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டுகள் அமைக்கப்படும்.பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!

 அரசுப் பள்ளிகளில் கரும்பலகைக்கு மாற்றாக 80,000 ஸ்மார்ட்போன்கள் அமைக்கப்பட உள்ளதாக கல்வித் துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் அறிவித்துள்ளார்.

 ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதிகளைச் சார்ந்த 692 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாநேற்று நடைபெற்றது.

 இவ்விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேசும்போது ,2013ஆம் ஆண்டு முதல் 52 லட்சத்து 47 ஆயிரம் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் பிளஸ் டூ முடித்தவுடன் வேலை வாய்ப்பினை பெறும் வகையில் பாடத் திட்டங்கள் புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும், நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளில் 177 கேள்விகள் தமிழக அரசின் பாடப் புத்தகத்திலிருந்து கேட்டுள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 அரசு பள்ளிகளில் கரும்பலகைக்கு பதிலாக80,000 ஆயிரம் ஸ்மார்ட்போர்டுகள் அமைக்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜனவரிக்குப் பின் ஐஐடியில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக இணையதளம் மூலம் பட்டய கணக்காளர் பயிற்சி தற்போது அளிக்கப்பட்டு வருவதாகவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள நமது தமிழ் செய்தி வளைதளத்துடன் இணைந்திருங்கள்.  நன்றி!