பொங்கல் பரிசு  வாங்குவோர் கவனத்திற்கு!!

 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார்கள் .பரிசு வழங்கல் தொடர்பாக நியாயவிலை கடைகள் மற்றும் குடும்ப அட்டைதாரர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை உணவு வழங்கல் துறை தற்போது வெளியிட்டுள்ளது.

 பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் 2500 கூடிய பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். 5 பரிசு தொகை கைக்கு வரும் 26ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படுகின்றன இந்த பரிசுத்தொகை ஜனவரி 13-ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இந்த நிலையில் உணவு பொருள் வழங்கல் துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில் பொங்கல் பரிசு வங்குவோர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் இடம்பெற்றன: விதிமுறைகள் பின் வருமாறு :

 பொங்கல் பரிசு தொகுப்பு வரும் ஜனவரி 4ஆம் தேதி முதல் 12ஆம் தேதிக்குள்  முடிதல் வேண்டும் எனவும் அதில் விடுபட்ட அட்டைதாரர்கள் ஜனவரி 13ஆம் தேதி பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

டிசம்பர் 26 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை டோக்கன் விநியோகிக்கப்பட உள்ள இந்த நிலையில் ஒரு நாளைக்கு 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு மிகாமல் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொங்கல் பரிசு தொகுப்பு, 2500 ரூபா பணத்தையும் அட்டைதாரர்கள் ஒரே நேரத்தில் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. 

அத்தகையரொக்கத்தொகையை 2000 மற்றும் 500 தாள்களாக வழங்க வேண்டும் எனவும் வாய்ப்பில்லாத நேரத்தில்5 ஐந்நூறு ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பொங்கல் பரிசுத் தொகை வழங்கும் தொ டர்பான பரிவர்த்தனை அது சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் செல்போனில் குறுஞ்செய்தி வழியாக சென்றடையவேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .குடும்ப அட்டைதாரர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி ஒரு மீட்டர் என சமூக இடைவெளியை பின்பற்றி நிற்கும் மாறும் அதேபோல முகக்கவசம் அணிந்து வருவதும்  கட்டாயம் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் அனைவரும் இதை  கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளார்கள்.